என் மலர்

  தமிழ்நாடு

  வேலூர் எஸ்பி ஆபீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
  X
  வேலூர் எஸ்பி ஆபீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

  வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கோவை காதல் ஜோடி தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கோவை காதல் ஜோடி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
  வேலூர்:

  கோவை போடிபாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25) மதுக்கரை குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தபு (21) இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தனர்.

  அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தனர்.

  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு வெளியேறினர்.

  பெங்களூருவில் திருமணம் செய்துகொண்டு வேலூருக்கு இன்று வந்தனர். இந்த நிலையில் பெண் வீட்டார் அசோக்குமார் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

  இதனால் அச்சமடைந்த காதல்ஜோடி இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

  காதல் ஜோடி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  Next Story
  ×