search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கல்லணை பாலத்தின் மேல் உள்ள சிலைகளும், மதகுகளுக்கும் வர்ணம் பூசும் பணி நடக்கிறது
    X
    கல்லணை பாலத்தின் மேல் உள்ள சிலைகளும், மதகுகளுக்கும் வர்ணம் பூசும் பணி நடக்கிறது

    ஜூன் 12ந் தேதிக்கு முன்னதாக மேட்டூர் அணை திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

    மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும்.

    தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 111.64 அடியாக உள்ளது. நீர்வரத்து 28,952 கனஅடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 80.761 டி.எம்.சி ஆக உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு ஜூன் 12ல் திறக்கப்பட்டது.

    நடப்பாண்டு தற்போது உள்ள சூழ்நிலையில் ஜூன் 12ந்தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைநிரம்பும் நிலையில், ஜூன் 12க்கு முன்னதாக நீர் திறக்கப்படுமா? என்பது விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர் அணை திறப்பு வரலாற்றில் ஜூன் 12ந் தேதிக்கு முன்னதாக 11 முறை நீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி 17 முறை நீர் திறக்கப்பட்டுள்ளது. 59 தடவை வழக்கமான ஜூன் 12க்கு பிறகு நீர் திறக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள சூழலில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இயலும் என்று விவசாய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    நீர்வள ஆதார துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கால்வாய் பாசனத்தை எதிர்நோக்கி உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்வது குறித்து எவ்வித முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    ஆழ்குழாய் தண்ணீரை கொண்டு முன்பட்ட சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வயல்களை தரிசு உழவு செய்தல், வயல்களில் எருஅடித்தல் போன்றபணிகளை இன்னும் தொடங்காமல் உள்ளனர்.

    வேளாண் துறையினரும் மேட்டூர் அணை திறப்பு குறித்தோ, குறுவை சாகுபடி திட்டமிடுதல் குறித்தோ முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடாத நிலை காணப்படுகிறது.

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து கல்லணை வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து பாலங்களில் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாலங்களில் உள்ள சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
    Next Story
    ×