என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சாந்தன்
ராஜூவ் காந்தி கொலை கைதி சாந்தனுக்கு வேலூர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை
ராஜூவ் காந்தி கொலை கைதி சாந்தனுக்கு வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
அங்கு சாந்தனுக்கு ரத்தம் சர்க்கரை அளவு ஈசிஜி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. சோதனை முடிந்த பிறகு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சாந்தன் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






