என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்கள் பூத்துகுலுங்குவதை படத்தில் காணலாம்
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்கள் பூத்துகுலுங்குவதை படத்தில் காணலாம்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்

    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஊட்டி:

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் முதல் பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. நாற்றுகள் வளரும் காலத்தை பொருத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

    நடவு செய்யப்பட்ட பூந்தொட்டிகளில் தற்போது பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. தாவிரவியல் பூங்கா ஊழியர்கள் தினமும் பூந்தொட்டிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

    இம்முறை தொடர்ந்து மழை பெய்ததால் தாவிரவியல் பூங்காவின் புல்வெளிகள் செடிகள் மரங்கள் என அனைத்தும் பசுமையாய் மாறி உள்ளது.
    Next Story
    ×