என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் மின்வேலியில் சிக்கி யானை பலி- தோட்ட உரிமையாளர் கைது

    கோவையில் மின்வேலியில் சிக்கி யானை பலியான சம்பவம் குறித்து 2 மாதத்திற்கு பிறகு தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்ட வனசரகத்துக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள வரப்பாளையத்தில் மனோகரன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    இதில் அவர் வாழை பயிரிட்டு இருந்தார். யானை உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து வாழையை பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றிலும் சூரிய மின் வேலி அமைத்து இருந்தார். சம்பவத்தன்று இவர் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டித்து விட்டு மின் வேலியில் மின்சாரவாரிய இணைப்பை இணைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

    நள்ளிரவு அந்த வழியாக வந்த 15 வயது மதிக்க தக்க யானை மின்வேலியை தாண்டி சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதிக சக்தியுடன் கூடிய மின்சாரத்தை வேலியில் இணைத்ததால் யானை உயிரிழந்தது தெரிய வந்தது. மின்சாரதுறையினர் விரைந்து சென்று மனோகரனுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் தோட்ட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் நரேஷ் ஆகியோர் மீது வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் யானை இறப்புக்கு காரணமாக தோட்ட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் நரேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். 2 பேரையும் வனத்துறையினர் சிறப்பு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    தலைமறைவாக இருந்த மனோகரன் பலமுறை முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் கோர்ட்டு அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்த மனோகரன் இன்று காலை 6.30 மணிக்கு பன்னிமடை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 2 மாதங்களுக்கு பிறகு கைதான தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நரேஷை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×