என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு
By
மாலை மலர்2 April 2022 12:41 AM GMT (Updated: 2 April 2022 12:41 AM GMT)

தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக நேற்றும் கொரோனா உயிரிழப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று நிலவரம் குறித்து தகவல்களை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது.
நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று புதிதாக 27 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்கள் 16 பேர் உள்பட 32 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 25 மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. நேற்றைய நிலவரப்படி 293 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×