என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாம்புகள்
குன்னூர் தேயிலை வாரியத்தில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்
குன்னூர் தேயிலை வாரியத்தில் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நடனமாடுவதை கண்டு ரசித்த ஊழியர்களும், தொழிலாளர்களும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான தேயிலை வாரியம் உள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் அருகே தோட்ட ங்களும், அடர்ந்த வனப்பகுதியும் உள்ளது. இதனால் அடிக்கடி காட்டு விலங்குகள் உள்ளே புகுந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வனத்திற்குள் இருந்து ஒரு சாரை பாம்பு தேயிலை வாரியத்திற்குள் வந்தது. அதனை பின்தொடர்ந்து, மற்றொரு நாக பாம்பும் வந்தது. 2 பாம்புகளும் அங்குள்ள புல்தரையில் சிறிது நேரம் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. பின்னர் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நடனமாடியது. இதனை அங்கிருந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். இதற்கிடையே ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் பாம்புகள் பிடிபடவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகராமல் நின்ற பாம்புகள் யாருக்கும் எந்தவித தொந்தரவையும் கொடுக்காமல் நடனமாடி கொண்டிருந்தது. பயம் ஒருபுறம் இருந்தாலும் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நடனமாடுவதை ஊழியர்களும், தொழிலாளர்களும் சிறிது நேரம் நின்று கண்டு ரசித்தனர். சிலர் தங்களது செல்போனிலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். சிறிது நேரம் கழித்து பாம்புகள் அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டன.

Next Story