என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோப்புபடம்
நீலகிரியில் 62.68 சதவீத வாக்குப்பதிவு
நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் அதிகம் பேர் வாக்களித்தனர்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லி யாளம் உள்ளிட்ட 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் அந்த அறை சீல் வைத்து பூட்டப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சியில் 55.14 சதவீதமும், குன்னூர் நகராட்சியில் 63.15 சதவீதமும் வாக்குகள் பதிவானது. கூடலூர் நகராட்சியில் 62.17 சதவீத வாக்குகளும், நெல்லியாளம் நகராட்சியில் 64.23 சதவீதம் மொத்தம் 59.98 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.
அதிகரட்டி பேரூராட்சி யில் 66.48 சதவீதம், பிக்கட்டி பேரூராட்சியில் 67.11 சதவீதம், தேவர்சோலை பேரூராட்சியில் 67.26 சதவீதம், உலிக்கல்லில் 67.26 சதவீதமும் பதிவாகி யது.
ஜெகதளா பேரூராட்சியில் 64.48 சதவீதம், கேத்தி பேரூராட்சியில் 63.43 சதவீதம், கீழ்குந்தா பேரூராட்சியில் 68.63 சதவீதம், கோத்தகிரி பேரூராட்சியில் 62.73 சதவீதம், நடுவட்டம் பேரூராட்சியில் 66.13 சதவீதமும் பதிவாகி இருந்தது.
ஓவேலி பேரூராட்சியில் 65.89 சதவீதமும், சோலூர் பேரூராட்சியில் 75.14 சதவீதம் என 11 பேரூராட்சிகளிலும் 66.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்து.இந்த வாக்குப்பதிவின் மூலம் நகராட்சி பகுதி மக்களை விட, பேரூராட்சி பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தது தெரியவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாக 62.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
Next Story






