என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜிகே வாசன்
மழையால் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை
மழையால் சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தாமதம் இல்லாமல் அரசு அளிக்க வேண்டும் என ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓரிரு நாள்களுக்கு முன்னர் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் எக்டேர் நெற்கதிர்கள் தற்பொழுது பெய்த மழையில் பாதிப்படைந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பருவம் தவறி பெய்த மழையால் பெரிதும் பாதித்து இருக்கிறது. அரசு உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீட்டை தாமதம் இல்லாமல் அளிக்க வேண்டும். அதோடு காப்பீடு நிறுவனங்களும் காப்பீட்டு தொகையை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






