என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருநங்கை கங்கா - நிஷா - ஈஸ்வரி
வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், வாணியம்பாடி நகராட்சியில் 3 திருநங்கை வேட்பாளர்கள் போட்டி
குடியாத்தம் நகராட்சி 31-வது வார்டில் இந்திய குடியரசு கட்சி சார்பில் திருநங்கை நிஷா (33) போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்து வார்டுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக திருநங்கை கங்கா போட்டியிடுகிறார். ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில் பின்புறமுள்ள பகுதியில் வசித்து வரும் கங்கா ஏற்கனவே சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் மனுதாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.
வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து கண்டிப்பாக வெற்றி பெறுவேன். மக்கள் நலப் பணிகளில் திறம்பட செயலாற்றுவேன் என்றார்.

வாணியம்பாடி நகராட்சி 20-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி போட்டியிடுகிறார்.
வார்டுகளில் சென்று பிரசாரத்தை தொடங்கி ஓட்டு கேட்டு வருகிறார்.

Next Story