search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    .
    X
    .

    நாமக்கல்-முசிறி இடையே ரூ.288.54 கோடியில் அமையும் தேசிய நெடுஞ்சாலை

    நாமக்கல்-முசிறி இடையே ரூ.288.54 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
    நாமக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்தும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட் டங்களுக்குச் செல்வோர் நாமக்கல் வழியாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாமக்கல்-திருச்சி சாலையானது சுமார்  72 கி.மீ. தூரம் கொண்டது. இது இருவழிச் சாலையாக இருப்பதாலும், அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    விபத்துகளைக் குறைப் பதற்கு நாமக்கல்-திருச்சி சாலையை தேசிய நெடுஞ்சாலை என்ற வகையில் 4 வழிச்சாலையாக மாற்றம் செய்ய வேண் டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து நாமக்கல்-முசிறி இடையே 39 கி.மீ. தொலை வுக்கு ரூ.288.54 கோடியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைய உள்ளது. சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல் அருகே சின்ன வேப்பநத்தம் முதல் எம்.மேட்டுப்பட்டி வரையில் 12.50 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படுகிறது.

    ஏப்ரல் மாதம் பணிகளைத் தொடங்கு வதற்கான அனுமதி கிடைத் துள்ளது.இதேபோல, எம்.மேட்டுப் பட்டி முதல் முசிறி வரையில் 26.50 கி.மீ. தொலைவுக்கு ரூ.184 கோடியில் சாலை அமைக்கப்படுகிறது.

    அதற்கான பணிகளை திருச்சி மண்டல தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்கொள்வர். முதல் கட்டமாகவே இந்த நாமக்கல்-முசிறி இடையே சாலை அமைகிறது.

    இரண்டாம் கட்டமாக முசிறி முதல் திருச்சி மாவட்ட எல்லை வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறும். இந்தச் சாலைக்கு இடையே ஒரு சுங்கச்சாவடி அமைவதற்கு வாய்ப்பு  உள்ளது  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×