என் மலர்

  தமிழ்நாடு

  சிவசங்கர் பாபா
  X
  சிவசங்கர் பாபா

  சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு- ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவசங்கர் பாபா ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருமுறை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சீரான பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  சென்னை:

  செங்கல்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பத்தில் தனியார் பள்ளியை நடத்தி வந்தவர் சாமியார் சிவசங்கர் பாபா. இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த ஜூன் 13-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

  பின்னர் இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி சித்தரஞ்சன் பூங்காவில் கடந்த ஜூன் 16-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர்.

  இதற்கிடையே அந்த மாதம் 18-ந்தேதி சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அதே மாதம் 26-ந்தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது மேலும் 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  இந்த வழக்குகளில் சிவசங்கர் பாபா அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வந்தார்.

  இதற்கிடையே நேற்று முன்தினம் மீண்டும் சிவசங்கர் பாபா உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். சிவசங்கர் பாபாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  சிவசங்கர் பாபா ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருமுறை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சீரான பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×