என் மலர்

  தமிழ்நாடு

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாரத்தில் ஒருநாள் மீன்பிடிக்க செல்லாத்தால் ஏறத்தாழ ஒரு மீனவர்களுக்கு தலா 500 முதல் 1000 ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
  ராமேசுவரம்:

  கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. முழுஊரடங்கு நாளில் மருந்துகடை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.

  ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். முழு ஊரடங்கு காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று பிடித்து வரும் மீன்களை வாங்கிச் செல்வதற்கு வாகனங்களில் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

  மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வர முடியாது என்று அறிவித்து விட்டனர். இதனால் கடந்த வாரம் சனிக்கிழமை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

  அதேபோல் இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஏறத்தாழ இந்த பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் 1500-க்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

  ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து வாரத்தில் 3 நாட்கள் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருவார்கள். மேலும் இந்த தொழிலை நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணிகள் செய்து அதில் வரக்கூடிய வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.

  இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாததால் அன்றையதினம் எந்த வருவாயும் இல்லாமல் மீனவர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீன்களை பராமரிக்கும் பணிகள் செய்து அதன் வருவாய் மட்டும் கிடைக்கும் நிலை உள்ளது.

  இதனையடுத்து வாரத்தில் ஒருநாள் மீன்பிடிக்க செல்லாத்தால் ஏறத்தாழ ஒரு மீனவர்களுக்கு தலா 500 முதல் 1000 ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு மொத்தமாக ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  Next Story
  ×