என் மலர்

  தமிழ்நாடு

  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
  X
  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

  ரெயில்வே ஆலோசனைக் கூட்டம்- குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்திய விஜய் வசந்த் எம்.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி மக்கள் பயன்பெறும் வகையில் ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.
  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-

  தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்கள் தலைமையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ரயில்வே ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா நோய் தொற்று காரணமாகக் காணொளி  வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டு தென் தமிழக மக்கள் மற்றும் குமர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் இரயில்வே தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசினேன். 

  குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, போன்ற தென்மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், மற்றும் சுற்றுலா சம்பந்தமாக அதிக அளவில் சென்னை - கன்னியாகுமரி இரயில் வழித்தடத்தில் பயணித்து வருவதைச் சுட்டிக்காட்டி தென் தமிழக ரயில் பயணிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக இரயில்களை இயக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து  இரயில் நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் இரட்டை இரயில் பாதை பணியை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்  எனவும் வலியுறுத்தினேன்.  

  கன்னியாகுமரி மக்கள் பயன்பெறும் வகையில் ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார்  ரயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும்  கூட்டத்தில் வலியுறுத்தினேன். 

  ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக வாரக் கடைசி நாட்களில், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு வசதியாக வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு  ஒரு இரயிலை இயக்க வேண்டும். 

  அதேபோல் ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் இதனால் தென் தமிழகத்தில் பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்கள் ஹைதராபாத்துக்கு நேரடியாகச்  சென்றுவர இந்த இரயில் வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த ரயிலைக் குமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். 

  தாம்பரம் - நாகர்கோவில் 3 நாள் ரயிலை 6 நாட்களாக நீட்டிக்க வேண்டும், சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்கப்பட வேண்டும்,  திருவனந்தபுரம் - நெல்லை மெமூ இரயிலை இயக்கவும் வலியுறுத்தி இந்த ரயில்வே ஆலோசனைக்  கூட்டத்தின் வழியே மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என தென்னக இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்களிடம் வலியுறுத்தினேன்.

  இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. கூறி உள்ளார்.
  Next Story
  ×