என் மலர்

  தமிழ்நாடு

  லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
  X
  லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

  50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்- 3 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூளகிரி அருகே 50 அடி பள்ளத்தில் 2 லாரிகள் கவிழ்ந்ததில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
  சூளகிரி:

  கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி யை நோக்கி ரெண்டு தாரிகள் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ஒரு லாரியில் மக்காச் சோளமும் மற்றொரு லாரியில் மாட்டுத் தீவனமூம்  இருந்தது.  

  இந்த நிலையில் இன்று அதிகாலை சூளகிரி அருகே பேரிகை  அடுத்த ராமன் தொட்டி என்ற இடத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வந்தபோது 2 லாரிகளும் அடுத்தடுத்து எதிர்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 லாரிகளிலும் இருந்த டிரைவர்கள் ராஜ்குமார் , சிவக்குமார் மற்றும் கிளீனர் சித் தங்கப்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

  இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தொடர் விபத்துகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×