என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூர் உதவி கலெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது அலுவலகத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    X
    வேலூர் உதவி கலெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது அலுவலகத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    வேலூர் உதவி கலெக்டருக்கு கொரோனா

    கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணு பிரியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதேபோல கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் மோகன் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முழுவதும் சுகாதார பணிகள் செய்யப்பட்டன.

    பாதிக்கப்பட்ட அலுவலகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×