என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாலாற்று கரையோரத்தில் இளம்பெண்-வாலிபர் பிணம்
    X
    பாலாற்று கரையோரத்தில் இளம்பெண்-வாலிபர் பிணம்

    கல்பாக்கம் அருகே பாலாற்று கரையோரத்தில் இளம்பெண்-வாலிபர் பிணம்

    கல்பாக்கம் அருகே இளம்பெண் வாலிபர் பிணம் அருகருகில் கிடந்ததால் காதல் ஜோடியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் காரைத்திட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருக்கழுகுன்றம் தீயணைப்பு படையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல்கள் இரண்டும் அருகருகில் கிடந்ததால் காதல் ஜோடியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×