search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் சிக்கிய கார் அப்பளம்போல் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் சிக்கிய கார் அப்பளம்போல் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

    பெரம்பலூர் அருகே விபத்து- சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி ஆசிரியர் பலி

    பெரம்பலூர் அருகே இன்று காலை சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெரம்பலூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி மகேஸ்வரி, அரக்கோணத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்களது மகள் காவிய சாதனா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ராஜேஷின் மாமியார் ஊரான செங்கோட்டைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். நாளை புத்தாண்டை திருத்தணியில் கொண்டாட விரும்பிய திருத்தணி ராஜேஷ் செங்கோட்டையில் இருந்து மீண்டும் காரில் புறப்பட்டார்.

    காரை ராஜேஷ் ஓட்டினார். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கொண்டிருந்தபோது இடது பக்க ஓரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வாலாஜாபாத்திற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் மோதியது.

    இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி பலியானார். அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் காவிய சாதனா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்துக்கு காரணமாக லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த டிரைவர் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெருமாள்கோவில் வலசு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியான ராஜேஷின் தம்பி வெங்கடேஷ் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
    Next Story
    ×