search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீப்பெட்டி
    X
    தீப்பெட்டி

    தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்வு- இன்று முதல் அமலுக்கு வந்தது

    பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்கப்பட்டு வந்தது. மூலப்பொருட்களான தீப்பெட்டி குச்சிகள், மருந்துகள், அட்டை போன்றவற்றின் விலை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரித்து உள்ளது.
    விருதுநகர்:

    மனித வாழ்வில் தீப்பெட்டி என்பது இன்றியமையாததாக உள்ளது. ஆனால் நவீன காலத்திற்கு ஏற்ப தற்போது எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் தீப்பெட்டியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தமிழகத்தில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் சிறிய அளவில் எண்ணற்ற தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்கப்பட்டு வந்தது. மூலப்பொருட்களான தீப்பெட்டி குச்சிகள், மருந்துகள், அட்டை போன்றவற்றின் விலை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரித்து உள்ளது.

    இதனையெல்லாம் கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் தீப்பெட்டியை 2 ரூபாய்க்கு விலை ஏற்றம் செய்து விற்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் தீப்பெட்டி 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×