என் மலர்tooltip icon

    செய்திகள்

    படுகை அணைக்கு நூதன அஞ்சலி
    X
    படுகை அணைக்கு நூதன அஞ்சலி

    படுகை அணைக்கு நூதன அஞ்சலி - சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்

    50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கிய படுகை அணையில் உடைப்பு என்பது அந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மக்கள் மனதிலும் வடுவை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு படுகை அணையில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் படுகை அணையின் நடுப்பகுதி உடைந்துள்ளது.இதற்கு அந்த பகுதி மக்கள் சார்பில் நூதன முறையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது.

    தோற்றம், மறைவு என குறிப்பிட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியின் புகைப்படத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் விமர்சனங்களுடன் கூடிய பல மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கிய படுகை அணையில் உடைப்பு என்பது அந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மக்கள் மனதிலும் வடுவை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×