என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் இன்று காலை முதல் வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையை ஆதாரமாக கொண்டு ஈரோடு, திருப்பூர், கரூர்ஆகிய மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது நேற்று பாதியாக குறைந்தது.

    இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் இன்று அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3058 கனஅடி தண்ணீர்வந்து கொண்டு இருக்கிறது.

    பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் இன்று காலை முதல் வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 477 கனஅடியும், பவானி ஆற்றில் 1723 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரம் கன அடி பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×