என் மலர்
செய்திகள்

தற்கொலை செய்த தாய் பாக்கியலட்சுமி, மகள் திவ்யா, மகன் திவாகரன்.
கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தில் தாய், மகள், மகன் என 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். கூலித் தொழிலாளி. அவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது36) இவர்களின் மகள் திவ்யா, (17) இருப்புக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மகன் திவாகரன் (15) என்பவர் கோட்டேரி அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பாக்கியராஜ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது உண்டு. இதனை பாக்கியலட்சுமி தட்டிக்கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் பாக்கியராஜ் தனது பிள்ளைகளிடமும் குடிபோதையில் தகராறு செய்து வந்தார்.
நேற்றும் வழக்கம் போல் மது அருந்த போவதாக பாக்கியலட்சுமிக்கு, பாக்கியராஜ் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி தனது மகள் திவ்யா, திவாகரன் ஆகியோரை நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மூவரும் முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Next Story