என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் மீன் வாங்குவதற்கு திரண்ட மக்களை படத்தில் காணலாம்.
    X
    கடலூரில் மீன் வாங்குவதற்கு திரண்ட மக்களை படத்தில் காணலாம்.

    கடலூரில் மீன்கள் வாங்குவதற்கு திரண்ட மக்கள்

    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஒரு சிலர் முக கவசம் அணியாமலும் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்றுநோய் பாதிப்பு நாளடைவில் குறைந்து வருகிறது. நேற்று 127 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.

    மேலும் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காண முடிந்தது.

    இதுமட்டுமின்றி கடலூர் நகர் முழுவதும் இன்று காலை முதல் இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது. மேலும் கடலூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்களிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

    இதனை தொடர்ந்து இறைச்சிக் கடை முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இறைச்சி வாங்கி சென்றனர். ஆனால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் ஒரு சிலர் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×