என் மலர்
செய்திகள்

மணிகண்டன்.
தாராபுரம் அருகே தேர்தல் பிரசாரத்தில் மது அருந்திய வாலிபர் மரணம்
தாராபுரம் அருகே தேர்தல் பிரசாரத்தில் மதுவை அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாலிபர் இறந்தாரா? அல்லது பழரசம் சேர்த்து குடித்ததால் இறந்தாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெரிச்சி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). வெங்காய வியாபாரி. இவரது மனைவி சிந்து (26). நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் யோகேஸ்வரன்(21), விவேகானந்தன்(26), வசந்த் (25) ஆகிய 4பேரும் அப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் வேட்பாளர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
பிரசாரம் முடிந்ததும் 4 பேரும் மது அருந்தியுள்ளனர். தாங்களே தயாரித்து வைத்திருந்த பழரசத்தையும் சேர்த்து மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென மணிகண்டனும், யோகேஸ்வரனும் மயங்கி கீழே விழுந்தனர்.
உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய யோகேஸ்வரனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவை அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்தனரா? அல்லது பழரசம் சேர்த்து குடித்ததால் இறந்தனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story