என் மலர்

  செய்திகள்

  கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
  X
  கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

  ராமநாதபுரம் திரும்பிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தில் இருந்து ராமநாதபுரம் திரும்பிய 4 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
  ராமநாதபுரம்:

  இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10 பேர் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர்களது வீடுகளில் தங்கி இருந்தனர்.

  இதையறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து இங்கிருந்து 4 பேரையும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

  ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை ஆய்வு முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

  இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று காலை மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

  இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்துள்ள அனைவருக்கும் வீரிய கொரோனா பரிசோதனைகள் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் வந்துள்ளது தெரியவந்தது.

  அவர்களில் தற்போது 4 பேர் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் வியாழக்கிழமை (நேற்று) அவரவர் வசிப்பிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  அவர்களுக்கு வீரிய கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.

  வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் வருவோரை அவர்கள் வந்திறங்கும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். பரிசோதனை முடிவு அடிப்படையில் அவர்கள் கண்காணிக்கப்படுவர்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×