என் மலர்
செய்திகள்

அங்கன்வாடி கட்டிடம் மழை நீரால் சூழ்ந்து இருக்கும் காட்சி.
வந்தவாசியில் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது
வந்தவாசி பகுதியில் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் 150-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
வந்தவாசி:
நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைகாரணமாக வந்தவாசி அடுத்துள்ளது பாதிரி ஏரி நிரம்பி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் சவுரிபாளையம் என்ற இடத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். பாதிரி ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி தூர்ந்துபோய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் குடிசை வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதன்காரணமாக குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
புயல் மழைக்காரணமாக குடிசை மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப்பகுதி மக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, குடிசைகளை சூழ்ந்துள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும், அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு செல்லும் வழியில் உள்ள 40 ஆண்டு பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. அதேபோன்று மேல்மருவத்தூர் சாலை, புலிவாய், தெய்யார், வல்லம், கிருஷ்ணாபுரம், கூத்தம்பட்டு, தாலுகா அலுவலகம், வங்காரம், சத்யா நகர், நம்பேடு, நடுக்குப்பம் ஆகியபகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேல்மருவத்தூர் சாலையில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நகராட்சி, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறையினர் ஒருங்கிணைந்து, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் என்பவருடைய வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பாக்கியநாதன் அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சென்று மரத்தை அகற்றினர்.
மேலும் தகவல் அறிந்ததும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பி.ஜெயராமன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சென்று நிவாரண பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அமைச்சர் தனது சொந்த பணத்தில் இருந்து நிதி உதவி வழங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
நிவர் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. போளூரில் 88 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இந்த மழைகாரணமாக மாம்பட்டு, வசூர் கிராமங்களில் வாழைமரங்கள், தென்னை மரங்கள் நாசமாயின. அரியாத்தூர் கிராமத்தில் ராதிகா, தனலட்சுமி, தருமன் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. இதேபோல் கரைப்பூண்டியில் பாபு, கரிக்காத்தூரில் மின்னல் கொடி, புத்திராம்பத்தில் பஞ்சமூர்த்தி, பொத்தரையில் கங்கா, துரிஞ்சிகுப்பத்தில் தருமன், புதுப்பாளையத்தில் முருகய்யன், பெரியகரம் ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகளும், படவேடு கிராமத்தில் செல்வகுமார், வெங்கடேசன், கோமதி ஆகிய மூன்று பேரின் வீடுகள் என 13 வீடுகள் சேதமடைந்தன.
நேற்று முன்தினம் இரவு போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசாமி மலைக்கோவில் பகுதியில் ராட்சத பாறை ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்தது. அப்போது அங்கிருந்த பெரிய மரத்தின்மீது பாறை மோதி நின்றுவிட்டது. மலை அடிவாரத்தில் பல வீடுகள் உள்ளன. பாறை மரத்தின்மீது மோதி நின்றதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்யாறு தாலுகாவில் பாராசூர், நாவல்பாக்கம், மாளிகைபட்டு, புளியரம்பாக்கம், ஏனாதவாடி, அருகாவூர் பெருங்கட்டூர், ராமகிருஷ்ணாபுரம் வெம்பாக்கம் தாலுகாவில் வடஇலுப்பை, புகை சமுத்திரம், நாட்டேரி, பிரம்மதேசம், வெங்களத்தூர், கீழ்நெல்லி, சித்தாத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் களங்களில் நனைந்து சேதமடைந்துள்ளன.
வந்தவாசியை அடுத்த வங்காரம், கீழ்வெள்ளியூர், கண்டவராட்டி, சாத்தப்பூண்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல், அய்யப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களில் மழை நீர் புகுந்தது. திருவண்ணாமலை தாலுகாவில் 2 மாடுகள் உயிரிழந்து உள்ளது. மேலும் ஒரு குடிசை வீடும் சேதமடைந்து உள்ளது. புயல் எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முகாம்களிலேயே உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 130.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர்- 119.2, வந்தவாசி- 112.2, வெம்பாக்கம்- 109.5, கலசபாக்கம்- 99, ஜமுனாமரத்தூர்- 92.1, போளூர்- 88.5, ஆரணி- 84.2, திருவண்ணாமலை- 69.2, செய்யாறு- 65, தண்டராம்பட்டு- 62.4, செங்கம்- 28.4.

Next Story