என் மலர்

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

    கோவில் திருவிழாவில் விவசாயி படுகொலை - உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழா விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டம் நீடிக்கிறது.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு, இதே கோவில் திருவிழாவில், இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்ததால், இந்த ஆண்டு அமைதி பேச்சுக்கு பின்னரே திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருவிழா தகராறில், விவசாயி ஒருவர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது உடலை எடுக்கவிடாமல் அவருடைய உறவினர்கள் விடிய, விடிய சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றுமொரு தரப்பினரால் அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×