என் மலர்

  செய்திகள்

  2 குழந்தைகளை தேடும் பணி
  X
  2 குழந்தைகளை தேடும் பணி

  சமயபுரம் அருகே தண்ணீரில் மூழ்கிய 2 குழந்தைகள்- 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இரண்டு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி மாயமான நிலையில் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.
  சமயபுரம்:

  சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே பெருவளை வாய்கால் செல்கிறது. அதன் கரையோரத்தில் ரவிச்சந்திரன் - அனிதா தம்பதியினர் 6 வயது தர்ஷினி, 4 வயது நரேன் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

  திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக அனிதா பணியாற்றி வருவதால் அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகள் இருவரையும், அனிதாவின்  தாயார் கவனித்து வந்துள்ளார். நேற்று  மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிக்க பெருவளை வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளனர்.

  குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக அனிதாவின் தாயார் கூறியதால், சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். 12 மணி நேரம் தீவிரமாக தேடிய நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரையும் சடலமாக மீட்டனர்.
  Next Story
  ×