என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மீட்கப்பட்ட செல்போன்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பார்வையிட்ட போது எடுத்தபடம்.
திருச்சி நகரில் திருட்டு போன ரூ.16¼ லட்சம் மதிப்புள்ள 130 செல்போன்கள் மீட்பு
By
மாலை மலர்23 Sep 2020 7:46 AM GMT (Updated: 23 Sep 2020 7:46 AM GMT)

திருச்சி நகரில் பல இடங்களில் திருட்டு போன ரூ.16¼ லட்சம் மதிப்புள்ள 130 செல்போன்களை மீட்டு அதனை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.
திருச்சி:
திருச்சி நகரில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் பஸ் பயணம், வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் பொதுமக்களும் கவனக்குறைவாக தங்களது செல்போன்களை தவறவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் மற்றும் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் செய்யப்பட்டிருந்தன.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இதுபற்றி விசாரணை நடத்த ஒரு தனிப்படை அமைத்தார். திருச்சி மாநகர சைபர் கிரைம் மற்றும் கோட்டை, கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையங்களில் உள்ள அதிகாரிகள், போலீசார் இந்த தனிப்படையில் இடம் பெற்று இருந்தனர்.
இவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் தீவிரமாக துப்பு துலக்கி 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 31 ஆயிரம் ஆகும்.
இந்த செல்போன்களை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, சிறப்பாக துப்பு துலக்கி செல்போன்களை மீட்ட காவல் அதிகாரிகளை பாராட்டுகிறேன். திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும் போலீசார் மற்றும் பொதுமக்களை இணைத்து ‘வாட்ஸ்-அப்’குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். இதன் மூலம் புகார் மற்றும் பல்வேறு தகவல்களை பெற்று குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றை தடுக்க முடியும்‘ என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி (சட்டம்- ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), கூடுதல் துணை கமிஷனர் ரமேஷ் பாபு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story
×