என் மலர்

    செய்திகள்

    மீன் மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்
    X
    மீன் மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்

    முக கவசம் அணியாமல் மீன் மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர்.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த சில மாதங்களாக ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.

    கொரோனா ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன் பேரில் ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் செப்டம்பர் மாதம் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி,மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் குவிய தொடங்கியது.

    இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுகிழமையான இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் மீன் வாங்கும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு கூட்டமாக நின்றனர்.
    Next Story
    ×