என் மலர்

  செய்திகள்

  தேர்வு
  X
  தேர்வு

  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு- இணையம் மூலம் வரும் 21 முதல் 30 வரை நடைபெறுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலை தூரக் கல்வி இறுதி பருவ மாணவருக்கு வரும் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
  சிதம்பரம்:

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலை தூரக் கல்வி இறுதி பருவ மாணவருக்கு வரும் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வ நாராயணன்  நேற்று வெளியிட்டுள்ளார்.

  தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகளை பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அந்தந்த துறைகள் மூலம் தெரியப்படுத்தபட உள்ளதாக தெரிவித்த அவர்,  இணையவழி தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய துறை தலைவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மாணவர்களின் நலன் கருதி "மாதிரி தேர்வு"  இணையதளம் வழியாக  அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும், பதிவாளர் ஆர். ஞானதேவன் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×