என் மலர்

  செய்திகள்

  கோவிலுக்காக திண்டுக்கல்லில் தயாராகும் 35 கிலோ மெகா சைஸ் பூட்டு
  X
  கோவிலுக்காக திண்டுக்கல்லில் தயாராகும் 35 கிலோ மெகா சைஸ் பூட்டு

  திண்டுக்கல்லில் 35 கிலோ எடையில் தயாராகும் மெகா சைஸ் பூட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலுக்காக திண்டுக்கல்லில் 35 கிலோ எடையில் மெகா சைஸ் பூட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் என்றாலே பூட்டு நகரம் என்று உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆனால் தற்போது இந்த தொழில் நலிவடைந்து வந்தாலும் ஒரு சில குடும்பத்தினர் தொடர்ந்து பாரம்பரியமாக பூட்டு தயாரிப்பை செய்து வருகின்றனர்.

  இங்கு தயாரிக்கப்படும் மாங்காய், தொட்டி பூட்டுகள், வங்கி லாக்கர்கள் மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு கோவில்களில் திண்டுக்கல்லில் தயார் செய்த பூட்டுகளே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  அந்த வகையில் மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலுக்கு 35 கிலோ எடையில் பூட்டு தயாரிக்கும் பணியை திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த முருகேசன் என்பவர் செய்து வருகிறார்.

  இந்த பூட்டு 2 அடி நீளம், 1 அடி அகலம் கொண்டது. இதன் சாவி 1½ அடி நீளம் கொண்டது. இது குறித்து முருகேசன் தெரிவிக்கையில், திருப்பதி, பழனி, மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பூட்டு தயாரித்து கொடுத்துள்ளேன்.

  கடந்த 38 ஆண்டுகளாக பூட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எனக்கு தற்போது மயிலாடுதுறை ரெங்கநாதர் கோவிலுக்கு பூட்டு தயாரிக்கும் பணி கிடைத்துள்ளது.

  எந்திர பயன்பாடு இல்லாமல் முழுக்க முழுக்க மனித உழைப்பை கொண்டே இதனை தயார் செய்து வருகிறேன். 35 கிலோ எடையில் பிரம்மாண்டமான 2 பூட்டுகள் கோவிலுக்கு தயார் செய்து ஓரிருநாளில் வழங்க உள்ளேன். திண்டுக்கல் பூட்டு தொழில் நலிவடையாமல் இருக்க இதனை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பாடப்பிரிவாக சேர்த்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

  Next Story
  ×