search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுமண தம்பதிக்கு முக கவசம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    புதுமண தம்பதிக்கு முக கவசம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

    முக கவசம் அணியாமல் வந்த புதுமண தம்பதிகளுக்கு அபராதம்

    திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு முக கவசம் அணியாமல் வந்த புதுமண தம்பதிகளுக்கு அபராதம் விதித்ததுடன் அவர்களுக்கு முக கவசங்களும் வழங்கப்பட்டது.
    பூந்தமல்லி:

    கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற வேண்டும். வயதானவர்கள், சிறுவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முறையாக முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பது குறித்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் இணை கமிஷனர் லட்சுமணன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது முக கவசம் அணியாமல் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதிகள் மற்றும் பக்தர்களுக்கு அபராதம் விதித்ததுடன், அவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கை கழுவும் திரவம் கொடுக்கப்பட்ட பின்னர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக கோவில் வளாகத்திலேயே மருத்துவ குழு அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் சமூக விலகல் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் அடிக்கடி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×