என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடையில் திருடிய 2 பேர் சிக்கினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சி வண்டிமேடு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

  இந்த கடையின் பின் பக்கச் சுவரில் கடந்த 1-ந்தேதி துளையிட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள், கல்லாபெட்டியில் வைத்து இருந்த ரூ.7,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

  மேலும் ரூ.2000 மதிப்புள்ள மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் தண்டராம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கிருந்த டாஸ்மாக் கடையின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அருகில் உள்ள தென்னந்தோப்பில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

  அவர்கள் கீழவணக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது55), ராதாபுரத்தை சேர்ந்த உசேன் (32) என்பதும், டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடியது அவர்கள்தான் என்றும் தெரியவந்தது. மேலும் திருட்டு நடந்த இரவில் கிருஷ்ணனும் உசேனும் மது வாங்கி குடித்துள்ளனர்.

  அப்போது மது போதை ஏறாததால் இருவரும் மேலும் மதுகுடிக்க விரும்பி உள்ளனர். அப்போது டாஸ்மாக் கடைமூடப்பட்டு விட்டதால் 2 பேரும் சேர்ந்து கடையின் பின் பக்க சுவற்றில் துளை போட்டுள்ளனர்.

  அப்போது மது பாட்டில்கள் உடைய தொடங்கியது. தொடர்ந்து உள்ளே நுழைந்தவர்கள் மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்று அன்றிரவு முழுவதும் மது குடித்துள்ளனர்.

  பின்னர் மீதியுள்ள மதுபாட்டில்களை மறைத்து வைத்த அவர்கள் மீண்டும் தென்னந்தோப்புக்கு வந்து மதுகுடித்தபோது போலீசில் சிக்கி கொண்டனர்.

  இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 15 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

  Next Story
  ×