என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தர்மபுரியில் மீட்கப்பட்ட 2 மூதாட்டிகளை படத்தில் காணலாம்.
மேட்டூரில் இருந்து 60 கி.மீ. தூரம் நடந்து வந்த 2 மூதாட்டிகள் தர்மபுரியில் மீட்பு
By
மாலை மலர்28 April 2020 3:23 AM GMT (Updated: 28 April 2020 3:23 AM GMT)

மேட்டூரில் இருந்து 60 கி.மீ. தூரம் நடந்து வந்த 2 மூதாட்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தர்மபுரியில் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் மாதம்மாள்(வயது 70). இவருடைய தங்கை லட்சுமி(68). இவர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன்பு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றதாக தெரிகிறது. மேட்டூரில் இருந்து இவர்கள் புறப்படுவதற்கு முன்பாகவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில் வாகன வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் வேறு வழியின்றி நடந்தே ஓசூருக்கு திரும்ப முடிவெடுத்தனர். இவர்கள் 2 பேரும் தினமும் சில கிலோமீட்டர் தூரம் என மெதுவாக நடந்து வந்தனர்.
இரவு நேரத்தில் ஆங்காங்கே சாலையோரங்களில் தங்கி உள்ளனர். கிடைத்த உணவை சாப்பிட்டு தங்கள் நடைபயணத்தை தொடர்ந்து உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை தர்மபுரி-ஓசூர் புறவழி சாலையில் அமைந்துள்ள சோகத்தூர் கூட்டுரோடு அருகே 60 கி.மீ. நடந்தே வந்து சேர்ந்தனர். அங்கு சாலையோரத்தில் உள்ள ஒரு கடை முன்பு மிகவும் சோர்வுடன் அமர்ந்து இருந்தனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலையோரத்தில் 2 மூதாட்டிகள் அமர்ந்திருப்பது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், அங்கு சென்று அந்த மூதாட்டிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மேட்டூரில் இருந்து ஓசூருக்கு நடந்தே செல்ல முயற்சித்த இவர்கள் தர்மபுரி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 மூதாட்டிகளையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், 2 மூதாட்டிகளும் தர்மபுரியில் உள்ள ஒரு காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.

Next Story
×