என் மலர்
செய்திகள்

நீதிமன்றம்
ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரிய வழக்கில் புதுவை அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் புதுவை அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் மக்கள் சேவை மைய தலைவர் வக்கீல் ரவி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. புதுவை அரசு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கியது. இது 2 மாதத்திற்கு போதுமானதாக இல்லை. ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பும்வரை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர், கொத்தனார், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், பிளம்பர், ஓட்டுநர், விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுவை அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் ஸ்ரீதர் ஆஜரானார்.

Next Story