என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வடலூரில் இன்று முஸ்லிம்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    X
    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வடலூரில் இன்று முஸ்லிம்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    குடியுரிமை சட்டத்தை கண்டித்து வடலூரில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று முஸ்லிம் ஜமாத் மற்றும் உலாம சபை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
    மந்தாரக்குப்பம்:

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முஸ்லிம்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று வடலூரில் முஸ்லிம் ஜமாத் மற்றும் உலாம சபை சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

    இதில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடக்குத்து, குள்ளஞ்சாவடி, வெங்கடாம்பேட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், டெல்லியில் நடை பெற்ற கலவரத்தை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×