search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் நிலையம்
    X
    தபால் நிலையம்

    கும்பகோணம் தபால் நிலையங்களில் செயல்படாத கணக்குகள் ரத்து- அதிகாரி தகவல்

    கும்பகோணம் தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    கும்பகோணம்:

    தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகளை ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் அஜாதசத்ரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாத தொகையை கையாளுவதற்காக மூத்த குடிமக்கள் நலநிதி விதிகள் 2016 என்ற முறையை அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

    அதன்படி இந்திய தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் மற்றும் அதில் உள்ள இருப்பு தொகையையும் பொது அறிவிப்பு செய்ய வேண்டுமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கோரப்படாத கணக்குகளில் உள்ள தொகையை எதிர்காலத்தில் கோர இயலாது என்பதை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

    மேற்குறிப்பிட்ட கணக்குகளின் விவரங்களை     indiapost.gov.in    என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரங்களை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த அஞ்சலகங்களில் உள்ள கணக்குகளின் விவரம் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும். இது தொடர்பான சந்தேகங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது கணக்கு வைத்துள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×