search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ந்தேதி புதுவை வருகை

    வருகிற 23-ந்தேதி நடைபெறும் புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை மத்திய பல்கலைக்கழகம் காலாப்பட்டில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

    இந்நிலையில் பல்கலைக்கழக 27-வது பட்டமளிப்பு விழா வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு கலையரங்கில் நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    விழாவில் புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×