search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிலில் நகை இருந்த பெட்டி திறந்து கிடந்த காட்சி
    X
    கோவிலில் நகை இருந்த பெட்டி திறந்து கிடந்த காட்சி

    அரியலூரில் கோவில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

    அரியலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் நகைகள் 40 பவுனை கொள்ளையடித்து சென்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மேலத்தெருவில் பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் சரவணன் கோவில் கதவை பூட்டி சென்றார். மீண்டும் இன்று காலை கோவில் கதவை திறக்க வந்தார்.

    அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மனின் கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள் மற்றும் பெட்டியில் இருந்த நகைகள் என மொத்தம் சுமார் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    இது குறித்து சரவணன் அரியலூர் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கோவில் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கோவில் கருவறை பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மனின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    ஊரின் மையப்பகுதியில் கோவில் உள்ளதால் உண்டியலை உடைத்தால் சத்தம் கேட்டு மக்கள் வந்து விடுவார்கள் என நினைத்து கோவில் உண்டியலை உடைக்காமல் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதனால் உண்டியலில் இருந்து பல லட்சம் ரூபாய் தப்பியுள்ளது.
    Next Story
    ×