search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டியானையை தோளில் தூக்கி சுமந்து செல்லும் வனஊழியர்.
    X
    குட்டியானையை தோளில் தூக்கி சுமந்து செல்லும் வனஊழியர்.

    குட்டியை தாய் யானையிடம் சேர்க்க கடும் முயற்சி

    ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வந்த குட்டியை தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் தோளில் சுமந்து கொண்டு காடுகாடாக செல்கின்றனர்.
    சத்தியமங்கலம்:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப் பகுதிகளில் பவள குட்டை என்னுமிடத்தில் தாயை பிரிந்து 3 மாதமே ஆன பெண் குட்டி யானை விளை நிலங்களில் புகுந்தது.

    இதை பார்த்த கிராம மக்கள் அதற்கு உணவு கொடுத்து பராமரித்து வனத்துறையின் மூலம் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.

    மனித வாடை பட்டவுடன் குட்டி யானையை மற்ற யானைகள் நிராகரித்தது மீண்டும் அந்த குட்டியானை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது.

    மீண்டும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு கராச்சி குரையில் உள்ள வனத்துறையின் மருத்துவமனையில் பராமரித்து வந்தனர். நாளொன்றுக்கு 15 லிட்டர் லாக்டோஜன் பால் குடித்து வந்தது. இந்நிலையில் மீண்டும் வனத்துறையினர் தாயுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி எடுத்துள்ளனர்.

    இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த குட்டி யானை மீண்டும் காட்டில் விட்டால் தாய் நிராகரித்தால் அது எங்கு போகும்? புலி சிறுத்தைக்கு பலியாகி விடும் என்று கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை வனத்துறை பாதுகாத்து முதுமலை யானைகள் காப்பகம் இல்லையென்றால் வண்டலூர் வன உயிரியல் காப்பகத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வனத்துறையினர் தொடர்ந்து குட்டியானையை ஒவ்வொரு இடமாக தூக்கி சென்று காட்டில் விட்டு தாயுடன் சேர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×