என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிக்க முயற்சி
    X
    தீக்குளிக்க முயற்சி

    போலீசை கண்டித்து கோர்ட்டில் பெயிண்டர் தீக்குளிக்க முயற்சி

    அரியலூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசை கண்டித்து கோர்ட்டில் பெயிண்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). பெயிண்டரான இவர் இடப்பிரச்சனை காரணமாக அரியலூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு சென்றார்.

    அரியலூர் பேருந்து நிலையம் அருகே செல்லும் போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அசோக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகவும், தற்போது மது அருந்தவில்லை எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அரியலூர் கோர்ட்டுக்கு சென்ற அவர், கோர்ட்டு வளாகத்தில் திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் வக்கீல்கள், அசோக்குமார் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மது அருந்தாத தன்னை மது அருந்தியதாக கூறி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எனவே போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அரியலூர் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×