என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது- 28 பயணிகள் உயிர் தப்பினர்
By
மாலை மலர்9 May 2019 2:24 PM GMT (Updated: 9 May 2019 2:24 PM GMT)

பெங்களூருவில் இருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 28 பயணிகள் உயிர் தப்பினர்.
சூளகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு ஆம்னி சொகுசு பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தின் மேற்கூறையில் அதிக சரக்குகளை ஏற்றி வந்தனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே வரும்போது பஸ்சின் மேல்கூறையில் இருந்த பொருட்கள் திடீரென்று தீபிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து ஆம்னி பஸ்சின் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த சவுக்கருக்கு தகவல் கொடுத்தனர். அவர் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணம் செய்த 28 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கினார். என்றாலும் தீ மளமளவென்று பரவி பஸ் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓசூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் டிரைவருக்கு தகவல் கொடுத்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பஸ்சின் மேல்கூறையில் தீப்பெட்டி அல்லது பட்டாசுகள் ஏற்றி வரப்பட்டதா? அல்லது மின் வயரில் இருந்து தீப்பொறி பறந்து பொருட்கள் மீது விழுந்து தீப்பிடித்ததா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×