search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர்அணை நீர்மட்டம் குறைந்ததால் அணையில் மூழ்கியிருந்த நந்தி சிலை-கிறிஸ்தவ ஆலயகோபுரம் வெளியே தெரியும் காட்சி
    X
    மேட்டூர்அணை நீர்மட்டம் குறைந்ததால் அணையில் மூழ்கியிருந்த நந்தி சிலை-கிறிஸ்தவ ஆலயகோபுரம் வெளியே தெரியும் காட்சி

    மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்தது

    காவிரியில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் அணை நீர்தேக்க பகுதியில் உள்ள நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரங்கள் முழுமையாக வெளியே தெரிகின்றன. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. நேற்று அணைக்கு 95 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று 107 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று அணை நீர்மட்டம் 70.02 அடியாக இருந்தது. இன்று காலை இது 69.96 அடியாக குறைந்தது. 7 மாதங்களுக்கு பிறகு இன்று அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2லட்சம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை 4 முறை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்து வருகிறது. கடந்த ஜுலை மாதம் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி இருந்தது. தற்போது காவிரியில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் அணை நீர்தேக்க பகுதியில் உள்ள நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரங்கள் முழுமையாக வெளியே தெரிகின்றன.

    மேட்டூர் அணையில் ஓரளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் அணையை நம்பி உள்ள சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார். #MetturDam
    Next Story
    ×