என் மலர்
செய்திகள்

வேலூர்-திருவண்ணாமலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 110 பேர் ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மறியல் செய்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்திருந்தனர்.
இதையடுத்து, நேற்றிரவு 9 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் விஸ்வநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்யாறில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்படி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட 110 அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். #JactoGeo






