என் மலர்
செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின. அலுவலகங்களில் பணிகள் நடைபெறாததால் பணி நிமித்தமாக வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நாடு முழுவதும் தொழிற் சங்க கூட்டமைப்பினர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட் டத்தை அறிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலக ஊழியர்கள், ஊராட்சித் துறை வளர்ச்சி மேம்பாட்டு துறையினர், காப்பீடு திட்ட அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர்.
மாவட்ட அளவில் வரு வாய்த்துறையில் அனை வரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங் களும் வெறிச்சோடி காணப் பட்டன.
மின்வாரிய துறையில் மாவட்ட அளவில் 743 பேரில் 330 பேர் பணிக்கு வரவில்லை. போக்குவரத்து துறையில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேசு வரம், முதுகுளத்தூர் என அனைத்து பகுதிகளிலும் சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட சங்கத்தினர் 150-க்கும் மேற் பட்டோர் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் அனைத்தும் இயங்கியது.






