என் மலர்
செய்திகள்

செங்கோட்டையில் கடைகள் அடைப்பு- தெருக்கள் வெறிச்சோடின
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. #VinayagarChathurthi #GaneshChathurthi
செங்கோட்டை:
செங்கோட்டையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
ஏ.டி.எம்.கண்ணாடி உடைக்கப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குண்டாறில் இன்று கரைக்கப்பட உள்ளன. அப்போது விநாயகர் சிலைகள் அனைத்தும் மீண்டும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்தின்போது மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் முன் எச்சரிகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
கலவர தடுப்பு வாகனமான வருண் வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செங்கோட்டையில் நேற்று நடந்த மோதலை தொடர்ந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தெருக்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். #VinayagarChathurthi #GaneshChathurthi

Next Story