என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ சுரங்க ரெயில் பணிக்காக ஓ.எம்.ஆர். சாலையில் மண் ஆய்வு
    X

    மாதவரம்-சிறுசேரி மெட்ரோ சுரங்க ரெயில் பணிக்காக ஓ.எம்.ஆர். சாலையில் மண் ஆய்வு

    மாதவரம் மற்றும் சிறுசேரி மெட்ரோ சுரங்க ரெயிலுக்காக ஓ.எம்.ஆர். சாலையில் மண் ஆய்வு பணி நடந்து வருகிறது. #MetroTrain #ChennaiMetro

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர் சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ்.வரை சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம், சிறுசேரி இடையே ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் வழித் தடம் அமைக்கும் பணி தொடங்கியது.

    பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.)யில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பற்காக மண் ஆய்வு பரிசோதனை பணி தற்போது நடந்து வருகிறது.

    இதற்காக பூமிக்கடியில் 6 மீட்டர் ஆழத்தில் மண் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் இடையே ரெயில் நிலையங்கள் அமையும் இடங்களில் சாலை ஓரங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சோழிங்க நல்லூர்- சிறுசேரி வரை மண் பரிசோதனை செய்யப்பட உளளது. மண் ஆய்வு பணிகள் முடிந்ததும் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    Next Story
    ×