என் மலர்

  செய்திகள்

  மகன்-மகளுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
  X

  மகன்-மகளுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆபாச வீடியோ காண்பித்து செக்ஸ் தொல்லை கொடுத்த கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் பழ வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 2 -ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

  இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது குடும்பத்தினரே கொலை செய்தது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

  முருகனுக்கும், கலைச்செல்வி (38) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாரிச்செல்வி (19) என்ற மகளும், ஆனந்தகுமார் (16) என்ற மகனும் உள்ளனர்.

  குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் தினசரி போதையில் தனது மனைவியிடம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதேபோல தனது மனைவியிடம் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

  இதனால் மனைவி கலைச்செல்வி தனது கணவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே தனது மகள் மலர்ச்செல்வி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

  கணவரின் செக்ஸ் தொல்லை குறித்து மகளிடமும், 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகனிடமும் கூறி கலைச்செல்வி அழுதுள்ளார். கடந்த 31-ந்தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகன் தகராறு செய்துள்ளார்.

  பின்னர் தனது மனைவி என நினைத்து மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு கொலை செய்ய முடிவு செய்தனர்.

  கலைச்செல்வியும் அவரது மகளும் கை, கால்களை பிடித்துக்கொள்ள ஆனந்தகுமார் கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இறந்துபோன தனது தந்தையின் உடலை எடுத்துக்கொண்டு தன்னுடன் படிக்கும் நண்பரான முகேஷ் குமார் என்ற முனியாண்டி (16) என்பவர் உதவியுடன் தோட்டத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.

  கொலை செய்யப்பட்ட முருகனின் உடலை போலீசார் எடுத்து கண்டுபிடித்தவுடன் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பீதி ஏற்பட்டது. போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் தஞ்சம் அடைந்தனர்.

  நடந்த விபரங்களை போலீசாரிடம் பின்னர் தெரிவித்துள்ளனர். கைதான கலைச்செல்வி மற்றும் மலர்செல்வியை மதுரை சிறையிலும், ஆனந்தகுமார் மற்றும் முகேஷ்குமாரை மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
  Next Story
  ×