search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த முன்னாள் எம்எல்ஏ வீடு.
    X
    கொள்ளை நடந்த முன்னாள் எம்எல்ஏ வீடு.

    வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை

    வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபட்டார்.

    கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் நதீம் தோல் வியாபாரி. மற்றும் குடும்பத்தினர் வாணியம்பாடி நியூ டவுனில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இதனை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.

    பெங்களூரில் இருந்து திரும்பிய அப்துல்சமத் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இது பற்றி வாணியம்பாடி டவுன் போலீசஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகைகள் சேகரிக்கபட்டன.

    முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் வீட்டின் அருகில் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்த இடத்தில் கொள்ளை நடந்தது வாணியம்பாடி போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

    போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    Next Story
    ×